Tuesday 9 April 2019

மோடி ஆட்சியும் வங்கி மோசடியும்:



மோடி ஆட்சியும் வங்கி மோசடியும்:
இந்திய ஒன்றியத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்ட பின் வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு மிகப்பெரிய வங்கி மோசடி தற்போது விடியோகான் நிறுவனம் ரூபாய் 90,000கோடி அளவுக்கு செய்திருக்கிற மோசடி தான்.https://economictimes.indiatimes.com/…/articl…/68722634.cms… இந்த வங்கி மோசடியில் பெருமளவிலான பணம் இழந்திருப்பது அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான்.
இந்த 90,000கோடி என்பது இந்தியா முழுமைக்கும் இருக்கிற தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கிற பணத்தின் மூன்று ஆண்டின் கூட்டுத்தொகை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இது ஏதோ இந்த ஒரு நிறுவனம் மட்டுமில்லை விஜய் மல்லைய்யா 9000கோடி ), நிரவ் மோடி(13,000கோடி), கனிஷ்க் நகை நிறுவனம் (824கோடி), நாதெல்லா சம்பத் நகைகடை(173கோடி) என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 2014லில் மோடி அரசு பதவிக்கு வந்த பின் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி தற்போது வங்கிகளின் பெரிய முதலாளிகள் வாங்கிய கடனளவு 56லட்சம் கோடி இதில் வரவே வராதென்று வங்கிகள் முடிவு செய்த வாரா கடன் மட்டும் 12லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. 
இதனால் கிட்டதட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மூடும் நிலைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையிலிருந்து பொதுத்துறை வங்கிகளை காப்பாற்ற வங்கி மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டனை கொடுப்பதோடு அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து நிலைமையை சரிசெய்யவேண்டிய மோடி அரசு. அதை செய்யாமல் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு அவர்களின் சொத்துகளின் மீது எந்த நடவடிக்கையை எடுக்காமல் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை இணைப்பதும், மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லையென்றால் அபராதம், மாதத்திற்கு நாண்கு முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அபராதமென்று சாதாரண மக்களிடமிருந்து பணத்தை பிடுங்குகிறது.
இப்படிப்பட்ட மோடி அரசு தான் சொல்லுகிறது நாங்கள் தேசத்துக்கு காவலாளிகளென்று இவர்கள் தேசத்திற்கு காவலாளிகள் இல்லை கார்ப்ரேட் முதலாளிகளுக்கு தான் காவலாளிகள்.

Monday 8 April 2019

இந்திய கல்வித்துறையை சிதைத்த மோடி அரசு:

இந்திய கல்வித்துறையை சிதைத்த மோடி அரசு:
2014 ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிஜேபியின் மோடி அரசு தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய கல்வித்துறை தான். இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்ட பொழுது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்டம் சொன்னது. ஆனால் நெருக்கடி கால கட்டத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. தற்போது பிஜேபியின் மோடி அரசு அதை மத்திய பட்டியலுக்கு கொண்டு போக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. குறிப்பாக மூன்று விஷயங்களை எடுத்துக்கொண்டாலே இது புரியும்.
1. ஒவ்வொரு மாநிலமும் தங்களிடம் இருந்த பல்கலைக்கழகங்களை நிர்மாணித்து கொள்ள 'பல்கலைக்கழக மானியக் குழு'என்ற ஒன்றை வகுத்து செயல்பட்டு வந்தது. ஆனால் 2018 ஜூன் மாதம் 'இந்திய உயர்கல்வி ஆணையம்' என்ற புது மசோதாவை மத்திய மோடி அரசு தாக்கல் செய்தது. இதன் அடிப்படை என்னவென்றால் இனி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கும் என்றும், மாநில அரசு புதிதாக பல்கலைக்கழகங்கள் தொடங்க முடியாது என்றும், பல்கலைக்கழக துணைவேந்தர் துறைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் இனி இந்த இந்திய உயர்கல்வி ஆணையமே நியமிக்கும் என்றும் மேலும் பல்கலைகழக பாடத்திட்டமும் இனி இந்த அமைப்பு தான் முடிவு செய்யுமென்றும் ஒரு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் பல்கலைக்கழகங்களில் மீதான மாநில அரசின் உரிமை முற்றுமுழுதாக பறிக்கப்பட்டு விட்டது. இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உண்டான நிலையில் தற்சமயம் இது நிறுத்தப்பட்டு இருக்கிறது.
2. அடுத்ததாக மருத்துவ துறையை எடுத்துக் கொண்டால் ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் என்ற அமைப்பு தான் இதுவரை தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வந்தது. இப்போது அதை மாற்றி விட்டு 'நேஷனல் மெடிக்கல் எஜுக்கேஷன் கமிஷன்' என்ற புதிய மசோதாவை டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதன் மூலம் இனி மாநிலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வரும் மருத்துவ மாணவர்கள் 4 ஆண்டுகள் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு ஐந்தாம் ஆண்டு மத்திய அரசு புதிதாக 'எக்ஸிட் டெஸ்ட்' என்கிற புதிய ஒரு தேர்வை நடத்தும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் மருத்துவர் ஆக முடியும் என்கிற நிலையை கொண்டு வந்திருக்கிறது.
3. அடுத்ததாக மிக முக்கியமான ஒன்றான இதுவரை தொடக்க கல்வி மற்றும் உயர் கல்விக்கு வருமானவரித் துறையில் 3% கல்வி வரியாக வருமான வரி செலுத்துபவர்களால் செலுத்தப்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 83 ஆயிரத்து 497 கோடி ரூபாய் இதன் மூலம் தொடக்க கல்வி மற்றும் உயர் கல்விக்கும் மாணவர்களின் சுகாதாரத்திற்கும் கிடைத்திருக்கிறது. இந்த பணத்தை இதுவரை முறையாக தொடக்கக் கல்விக்கும் உயர் கல்விக்கும் மத்திய அரசு செலுத்தாமல் வேறு துறைக்கு திருப்பிவிட்டு இருக்கிறது என்று 2017 18 ஆம் ஆண்டிற்கான சி ஏ ஜே அறிக்கை சொல்கிறது.
ஆக கல்வித்துறை என்பது கிட்டத்தட்ட அழிந்து சிதையும் நிலையை மோடி அரசு உருவாக்கி விட்டது. எஞ்சியிருக்கிற கல்வியையும் தான் என்ன சித்தாந்தத்தை கடைபிடிக்கிறதோ அதையே இந்திய ஒன்றியத்தில் இருக்கிற அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையையும் உருவாக்கி விட்டார்கள். இனி மாநிலங்கள் பாடத்திட்டங்களை முடிவு செய்யும் இடத்திலும் இல்லை பல்கலைக்கழகங்களை உருவாக்கும் இடத்திலும் இல்லை என்கிற நிலையில் மொத்த பொறுப்பையும் மத்திய அரசு மாநில அரசிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு இருக்கிற ஒரு அவலமான சூழ்நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது இச்சூழ்நிலையில் மீண்டும் மோடி அரசு வந்தால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிற மேற்சொன்ன அனைத்து மசோதாக்களும் சட்டமாக நிறைவேறும் அபாயம் உருவாகும். எனவே இவர்களை மீண்டும் தேர்ந்தெடுப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிபோட்டுக் கொள்வதற்கு சமம்

Sunday 7 April 2019

தமிழகத்தில் வெற்றிபெற மோடியும் எடப்பாடியும் செய்யும் சதிகள்:

திமுகவுக்கு மிகப்பெரிய பலமே சிறுபான்மையினர் ஓட்டும், அரசு ஊழியர்களின் ஓட்டும் தான்.இந்த இரண்டையும் பிஜேபியும் அதிமுகவும் திட்டமிட்டு தற்போது அழிக்கிறது. அதாவது சிறுபான்மையினரில் குறிப்பாக இஸ்லாமிய மக்களின் பெயர் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் நீக்கப்படுகிறது என்று கடந்த வாரம் ஆங்கில ஊடகங்களில் ஆதாரங்களோடு செய்தி வெளியிடப்பட்டது.
அதேபோல அரசு ஊழியராய் இருப்பவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்கள் தபால் மூலம் தங்களது ஓட்டுகளை பதிவு செய்துகொள்ளலாம் என்ற முறை இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பாகவே பதிவுத்தபால் கொடுக்கப்படும்.அது இன்னும் இந்த தேர்தலில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் உண்மையாகும் பட்சத்தில் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படப்போவது திமுக தான். எனவே மற்ற எந்த கட்சியை காட்டிலும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகமாக பேசியிருக்க வேண்டிய கட்சி திமுக தான். ஆனால் அவர்கள் இதுவரை இதுகுறித்து மிகப்பெரிய அளவில் பேசாமல் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.

Tuesday 2 April 2019

நாம் நினைப்பதை விட மிகக் கொடுரமாக பிஜேபி முன் நகருகிறது என்ன செய்ய போகிறோம்.

நாம் நினைப்பதை விட மிகக் கொடுரமாக பிஜேபி முன் நகருகிறது என்ன செய்ய போகிறோம்.

2014இல் ஆட்சியை பிடித்த பிஜேபி இந்த ஐந்து வருடத்தில் கிட்டதட்ட இந்திய ஒன்றியத்தில் இருக்கிற அனைத்து அரசு துறைகளையும்,தனித்து இயங்கக்கூடிய துறைகளையும் தனதாக்கிவிட்டது. இன்னும் பிஜேபி மட்டுமே இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்குமென்ற நிலையை மட்டும் தான் அவர்கள் அறிவிக்கவில்லையே ஒழிய மற்றபடி எல்லாம் செய்து விட்டது. இப்போது 2019தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அதையும் நிறைவேற்ற மிக மூர்க்கமாக வேலை செய்கிறது. அதற்கான சமிக்சை தான் இந்த முறை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றால் இன்னும் 50வருடங்களுக்கு இந்தியாவில் தேர்தலே நடக்காது என்று இந்துத்துவ தீவிரவாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்/ போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே நாம் அவர்களை ஏன் இன்னும் மூர்க்கமாக எதிர்க்கவேண்டுமென்பது தெரியவரும்.

தாங்கள் கொண்டுவந்த மோசமான பொருளாதார நடவடிக்கையால் கிட்டதட்ட இந்தியாவில் 90% மக்கள் பெரும் இன்னலுக்கு ஆகிருப்பதை கண்டு அவர்களை திசைதிருப்ப போலி தேசபக்தி வெறியை உருவாக்க புல்வாமா தாக்குதலை நடத்தி நம் இராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டவர்களை இழந்திருக்கிறோம்.இதை நான் சொல்லவில்லை இந்தியாவின் முன்னாள் உளவு துறை தலைவர் ஏ.எஸ் துலாத் சொல்லியிருக்கிறார்.” பிஜேபியின் வெற்றிக்கு ஜெயிஸ் இ முகமது அமைப்பு கொடுத்த பரிசு புல்வாமா தாக்குதல்” என்று. மீதமிருக்கிற 10% மக்களுக்கு ஏற்கனவே 10% இடஒதுக்கீடு கொடுத்துவிட்டார். ஆக அந்த கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது.

அடுத்து எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு தனது அதிகாரத்தின் கீழ் வரும் வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்துவது, நீதித்துறையின் மூலம் அவர்களை முடக்குவது, மேலும் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி தனக்கு ஓட்டு போடமாட்டார்களென்று உறுதியாக தெரிந்தவர்களை வாக்களார் பட்டியலிருந்து தூக்குவது இப்படி மட்டும் இந்தியாவில் கணக்கெடுக்க முடிந்ததில் குறைந்தபட்சம் 13கோடி பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். https://www.bloombergquint.com/elections/elections-2019-are-nearly-13-crore-voters-missing-from-indias-electoral-rolls?fbclid=IwAR14Sgz5nY2hP3tZqmh8WUg_qE_np8vVlNQtjmXIyXB4qjVaWaZDGi-UBu0#gs.30iql9. மேலும் பிஜேபிக்கு வரவேண்டிய வாக்குகளை பிரிப்பார்கள் அல்லது அதிக வாக்குகள் வாங்கும் எதிர்கட்சிகள் இவர்களுக்கு ஒழுங்கான சின்னங்களை ஒதுக்குமால் சம்பந்தமில்லாத சின்னங்களை ஒதுக்குவது அல்லது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டி எதிர்கட்சிகளின் சின்னங்களை வேண்டுமென்றே சுயேட்சைகளுக்கு ஒதுக்குவது. இந்த சதி வேலை தான் தமிழகத்தில் அமமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பெருமளவு நடக்கிறது.

இதையும் தாண்டி சமூகவலைதளங்களின் போலியான பொய்யான செய்திகளை வெவ்வேறு பெயர்களில் பரப்புவது இதற்காக பிஜேபி கோடி கோடியாக சமூக வலைதளங்களுக்கென்று செலவழிக்கிறது. இதற்கான ஆகும்செலவு அனைத்தும் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்து பெறுகிறது . இந்த தேர்தலுக்காக மட்டும் இதுவரை 1500கோடிக்கும் மேல் வெறும் தேர்தல் பத்திரம் (Electrol Bonds) மூலம் வாங்கியிருக்கிறது. https://www.thequint.com/elections/lok-sabha-elections-electoral-bonds-1716-crore-sold-in-2-months-political-funding?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=whatsapp_feed&fbclid=IwAR0_Tr1l2u_LNQZR2LkJDo1UFm6Um-cXUYqR6k-pFbXgkwE8qoyMsxOSloo. இது இல்லாமல் மறைமுகமாக வாங்கியதெல்லாம் எத்தனை கோடிகளென்று கணக்கே கிடையாது. இதே வேலையை எதிர்கட்சிகளும் செய்தால் என்ன செய்வதென்று யோசித்து பிஜேபி அரசு சமூக வலைதளங்கள் அனைத்தையும் தனது கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது. உதாரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் பிஜேபி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதாக சொல்லியே 687 முகநூல் பக்கங்களை முகநூலிலிருந்தே நீக்கியிருக்கிறது முகநூல் நிர்வாகம். https://www.livemint.com/elections/lok-sabha-elections/facebook-removes-687-pages-accounts-linked-to-congress-ahead-of-elections-1554122028775.html இப்படி தனக்கு எதிரான எந்த ஒரு சிறு எதிர்கருத்து வராதபடி முற்றிலும் முடக்கியிருக்கிறது பிஜேபி.

இப்படி எதிர்கட்சிகளின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க முடிந்த பிஜேபிக்கு பெரும் தலைவலியாக தேர்தல் அரசியலை விரும்பாத சமூக இயக்கங்கள் இருக்குமென்று அவர்களை முடக்குவதற்காக கைதுகள், அடுக்கடுக்கான வழக்குகள் என்று காவல்துறையின் மூலம் ஒருவேலையையும் செய்துவருகிறது.

ஆக இந்த தேர்தலில் எப்படியாகினும் வெற்றி பெற்றுவிடவேண்டுமென்று குறிப்பாக தமிழகத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டுமென்று மிககொடுரமாக வேலைசெய்கிறது. இவர்களுடன் இவர்களின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வேறு. ஆக நாம் நினைத்ததை விட கொடூரமான வேலையை பிஜேபி செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பதை களத்தை பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடிகிறது. நாம் இப்போ என்ன செய்யபோகின்றோமென்பதில் தான் நம் எதிர்காலம் இருக்கிறது. அதற்கான வேலையை செய்வோம். பிஜேபி உள்ளிட்ட இந்திய ஏகாதிபத்திய கட்சிகளை விரட்டி அடிப்போம். தேசிய இனங்களின் ஓர்மையோடு எழுவோம்.

Monday 1 April 2019

கோவை பகுதியில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு யார் காரணம்:

கோவை பகுதியில் பெண்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றங்கள் குறையவேண்டுமானால் ஆர்.எஸ்.எஸையும் அதன் கிளைகளான பிஜேபி, இந்து முண்ணனி,இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென்று மே 17 இயக்கம் சொன்னதற்காக அந்த தீவிரவாதிகள் 😛😛 தொலைபேசி மூலம் இயக்கத்திற்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். அடேய் காவி டரவுசர் மெண்டல்களே உங்க கட்சி யோக்கியத அப்படியிக்கும் போது நாங்களென்ன செய்ய. உதாரணத்திற்கு

நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறவர்களில் 106பேர் கொடூர குற்றப்பிண்ணனியுடையவர்கள். இதில் கிட்டதட்ட முக்கால்வாசிக்கும் மேலான கொடுர குற்றப்பிண்ணனியுடையவர்களை அதாவது 92பேரை நிற்க வைத்திருக்கிற கட்சி பிஜேபிதான். அதுவும் சாதாரண குற்றமில்லை, குழந்தை கடத்தல், பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் கொலை.


இது இப்போது மட்டுமில்லை இதற்கு முன்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும் குற்ற பிண்ணணிவுள்ளவர்கள் அதிக பேர் இருந்த கட்சி பிஜேபிதான். பார்க்க தேர்தல் ஆணையத்தின் அறிக்கையினை. https://adrindia.org/content/16th-lok-sabha-analysis-performance-mps-0

இப்படிப்பட்ட ஒரு பின்புலத்தை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல்கள் வைத்திருப்பதன் அடிப்படையில் தான் மே17 இயக்கம் இந்த கும்பல்களை தடை செய்தாலே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெருமளவு குற்றங்கள் கோவை பகுதிகளில் தானாக குறைந்து விடுமென்று சொல்கிறோம்.

இதற்கே பைல்ஸ் வந்த மாதிரி கத்தினால் இன்னும் உங்கள் புராண குப்பைகளையும், அவதாரங்களின் அசிங்களையும் பேசினால் நாட்டுகிட்டு செத்தே போயிருவீங்க போலேயே. அதுசரி அதெல்லாம் வெட்கம் மானம் சூடு சுரணை உள்ளவர்கள் செய்வார்கள் இந்துத்துவ கும்பலகளிடம் இதை எதிர் பார்க்க முடியுமா?

குறிப்பு:இனிமே போன் பண்ணும்போது நல்லா தெம்பா திராணியா நல்ல மிரட்டுற குரல் இருக்கிறவானா பார்த்து பேசச்சொல்லுங்க, ஏன்னா நேத்து ஒருத்தன் சீரியசா மிரட்டுறான் எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது..

Saturday 30 March 2019

இஸ்லாமிய தலித் வெறுப்பின் உச்சம் இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும்:

இஸ்லாமிய தலித் வெறுப்பின் உச்சம்
இந்தியாவை மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கித் தள்ளுகிற பிஜேபியின் மோடி அரசும், இந்திய தேர்தல் ஆணையமும்:

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியிலிருக்கிற இஸ்லாமியர் சிலரின் பெயர் வாக்களார் பெயர் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதை ஒரு புகாராக தமிழக தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அதே தொகுதியில் வேறு யாருடைய பெயராவது நீக்கப்பட்டிருக்கிறதா என்று விசாரித்த பொழுது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு உண்மை தெரியவந்திருக்கிறது. அது என்னவென்றால் கிட்டதட்ட 10,000வாக்களர்களின் பெயர் ஒரே தொகுதியிலிருந்து மட்டும் நீக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது தான். https://www.moneycontrol.com/news/politics/over-10000-muslim-voters-missing-from-electoral-rolls-in-tamil-nadus-harbour-assembly-3718571.html.


ஒரு சட்டமன்ற தொகுதியிலேயே இவ்வளவு பேரை நீக்கியிருக்கின்றார்களென்றால் தமிழகம் முழுமையும் கணக்கெடுத்தால் எவ்வளவு இருக்குமென்று நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. நியாயப்படி தமிழக தேர்தல் ஆணையம் இந்த செய்தி கிடைத்தவுடன் இதுகுறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் நடக்கவில்லை. இது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

சரி தமிழகத்தில் தான் இப்படியா என்றால்? இந்தியா முழுமைக்கும் இதே நிலைமை தான் என்று அடுத்த அதிர்ச்சி குண்டை தூக்கிப்போடுகிறார்கள் Missing Voter list app என்ற தனியார் இணையசேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இந்த இணைய சேவையை உருவாக்கிய காலித் சபிபுல்லா இந்தியா முழுமைக்கும் கிட்டதட்ட 13கோடி பேரின் பெயரை வாக்காளர் பெயர் பட்டியலிருந்து சமீபத்தில் பிஜேபி அரசின் துணையோடு இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதில் மிகமுக்கியமானது நீக்கப்பட்ட பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் ஆவார்கள் என்று ஆதாரத்தோடு செய்திகளை வெளியிட்டுள்ளார். https://www.bloombergquint.com/elections/elections-2019-are-nearly-13-crore-voters-missing-from-indias-electoral-rolls#gs.30iql9


மேலும் அவர் இவர்களெல்லாம் ஏனோ தானோ என்று நீக்கப்படவில்லை நன்கு திட்டமிட்டு எந்த தொகுதியிலெல்லாம் வெற்றி வாய்ப்பை தீர்மானிகக்க்கூடியவர்களாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் பழங்கடியினரும் இருப்பார்களோ அந்தந்த தொகுதிகளில் கடந்த கால ஓட்டுபதிவு மற்றும் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு நீக்கியிருக்கிறார்கள். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 40லட்சம் (39,27,882) பேரின் ஓட்டை நீக்கியிருக்கிறார்கள். இது அந்த மாநிலத்தின் 4.4%வாக்கு வங்கி ஆகும். இது அங்கு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாகும். https://www.news18.com/news/politics/names-of-nearly-40-lakh-maharashtra-voters-missing-from-list-jds-2075139.html

மேலும் இங்கு ஆட்சியிலிருக்கிற பிஜேபி அரசு உரிமைக்காக போராடிய தலித்துகளின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி தூப்பாக்கிசூடு நடத்தி கொலை செய்தது, காடுகளில் வாழும் விவசாய பழங்குடிகளை வெளியேற வைத்தது, இஸ்லாமிய வெறுப்பு உள்ளிட்டவைகளால் இவர்கள் யாரும் பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவே இங்கு மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவே வராதென்று அனைத்து கருத்து கணிப்புகளும் வெளிவந்திருக்கிற சூழலில் இவ்வளவு பேரை குறிவைத்து நீக்கியிருக்கிறது தேர்தல் ஆணையமென்றால் இது ஏதேச்சையாக நடந்ததாக எடுத்துக்கொள்ளமுடியாது. அடுத்ததாக தெலுங்கானவில் 22லட்சம் பேரின் பெயரை நீக்கியிருக்கிறது. அதுவும் இவர்கள் அனைவரும் கடந்த வருடம் 2018இல் நடந்த தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். மூன்று மாதங்களில் இவர்களின் பெயரை நீக்கியிருக்கிறார்களென்றால் எப்படி நடந்தது இது? இதேபோலத்தான் இந்தியாவெங்கும் பிஜேபியின் துணையோடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு ஒட்டுமொத்த ஓட்டு போடுபவர்களில் 12% பேரை முறையான வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் நீக்கியிருக்கிறது. https://www.ucanews.com/news/muslims-dalits-wiped-from-indian-electoral-rolls/84817

இது வெறும் தேர்தல் வெற்றிக்காக என்று மட்டும் கருதினோமென்றால் நாம் ஏமாளிகளாவோம். அதையும் தாண்டி பிஜேபியின் தாய் அமைப்பும் தத்துவ அமைப்புமான ஆர்.எஸ்.எஸின் நோக்கமே இஸ்லாமியர்கள் நீங்கிய அகண்ட பாரதம் தான். அந்த ஆபத்தான செயல்திட்டத்திற்கான முதல்படியாகவே இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை முதல்கட்டமாக பிஜேபி அரசு அவர்களிடமிருந்து பிடுங்கியிருக்கிறது. இது 1947இல் நடந்ததை போன்ற இரத்தகளரிக்கு பிஜேபி அரசு அடிபோடுகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. அப்படியென்று நடந்தால் இந்திய ஒன்றியம் மிகமோசமான ஆபத்தை சந்திக்கும் அதற்கு முழு காரணமும் பிஜேபியும் அதன் தாய் அமைப்பான ஆர்,எஸ்.எஸ் தான்.

Thursday 26 October 2017

ஆர்.எஸ்.எஸ் இன் அட்டூழியங்கள்:

ஆர்.எஸ்.எஸ் இன் அட்டூழியங்கள்:
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவை எப்படியாகினும் ஒன்றை தேசியமாக அதுவும் பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க வேண்டுமென்று கடந்த 70வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்,எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. அதற்கேற்றார் போல ஒரு சூழல் இப்போது மத்தியில் தனிப்பெரும்பாண்மையுடன் மோடி அரசு ஆட்சியில் இருப்பதால் முன்னைவிட தனது ஆட்டுழியங்களை மிகவேகமாக இந்தியா முழுமைக்கும் செய்ய ஆரம்பித்திருக்கிறது.
அதன்படி பள்ளியிலிருக்கும் சிறுவர்கள் மத்தியில் காவி பயங்கரவாதத்தை புகுத்த ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவான ’வித்யா பாரதி அகில இந்திய கல்வி நிறுவனம்’ மூலம் அரசு கொடுக்கிற புத்தகங்களை தவிர ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவு ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியாக புத்தகத்தை அச்சிட்டு வழங்கி வருகிறது. பார்க்க படம் 




அப்படி அவர்கள் கொடுக்கும் புத்தகத்தில்
1. இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களேதேஷ் போன்ற நாடுகளையும் சேர்த்து தனது அகண்ட பாரதம் என்ற கருத்தை திணிக்கிறது. 


2.அயோத்தியில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட மசூதி என்பது இராமர் கோயிலை இடித்து முஸ்லீம்களால் கட்டப்பட்டதென்றும் அதேபோல மதுராவிலிருக்கும் மசூதி என்பது கிருஷ்ணன் கோயிலை இடித்து முஸ்லீம் மன்னான அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதென்றும் ஒரு பொய்யான வரலாற்றை குழந்தைகள் மனதில் விதைக்கிறது.
3.விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யாரென்ற கேள்விக்கு ரைட் சகோதரர்கள் என்று பதில் இல்லாமல் ’பரத்வாஜ் மகரிஷி’ என்று பெயர் இருக்கிறது இவர் தான் இராமயணத்தில் ’புஷ்பக விமானம்’ இருந்ததென்று சொன்னவர் எனவே இவர் தான் விமானத்தை கண்டுபிடித்தவரென்று சிறுவர்களுக்கு சொல்லிகொடுக்க்ப்படுகிறது.
4.அதே போல கேரளமக்களால் கொண்டாடப்படும் ஓனம் பண்டிக்கையை வாமண ஜெயந்தி என்று பொய்யான வரலாற்றை போட்டிருக்கிறார்கள்.
5.இந்தியாவில் சிறந்தவர்கள் என்ற பட்டியல் போட்டு அதில் காந்திக்கு பக்கத்தில் அவரை கொலைசெய்த ஆர்.எஸ்.எஸ் இன் தாய் அமைப்பான இந்துமகா சபாவின் தலைவர்களான கோல்வார்க்கரையும் ஹெட்கேவர் படத்தையும் போட்டிருக்கிறார்கள். நேரு படம் அதில் இல்லை.
6.இந்தியாவின் சிறந்த மகன்களாக மனிதர்களை சாதிகளாக பிரித்த மனுஸ்மிருதியை எழுதிய மனுவையும் ஹானுமானையும் குறிக்கிறது.
இப்படி புத்தகம் முழுவதும் காவி பயங்கரவாத்த்தையும் சிறுபான்மையின மக்கள் மீதான வன்மைத்தை வளர்க்கும் வகையிலும் கருத்துகள் கொண்ட புத்தகத்தை திட்டமிட்டு இந்தியா முழுமைக்கும் 4முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 9புத்தகங்கள் 50ருபாய் என்ற அளவில் விநியோகித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத கும்பல்.
இந்த செயலை முதலில் கேரளாவில் தொடங்கியிருக்கிறார்கள் அங்கு பள்ளி ஆசியர்களே இதனை கடுமையாக எதிர்த்து போராட்டம் பண்ணியிருக்கிறார்கள். எனவே கேரள பள்ளி கல்வித்துறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டும் ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
இது தொடக்கம் தான் இதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல இந்த பயங்கரவாத கும்பல்கள் திட்டமிட்டிருக்கிறது. எனவே இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். தேசிய இனங்களையும் அதன் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் அழிக்க நினைக்கும் இந்த கும்பல்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.